2025 ஜூலை 24, வியாழக்கிழமை

விண்ணில் பாய்ந்தது மாணவர்களின் ரொக்கெட்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் அண்மையில் ‘டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம்`  அறிமுகப்படுத்தப்பட்டது.

இத் திட்டத்தின்  கீழ் இந்தியா முழுவதும் உள்ள 6ஆம்  வகுப்பு முதல் 12ஆம்  வகுப்பைச் சேர்ந்த  5000 மாணவர்கள் இணைக்கப்பட்டு அவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் இப் பயிற்சிகளைப் பெற்ற மாணவர்கள் 'பைக்கோ-செயற்கைக்கோள்கள்' என்ற பெயரில் 1 கிலோகிராமிற்கும் குறைவான எடை கொண்ட சுமார் 150 சிறிய ரக செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளனர்.

அந்தவகையில் நேற்றுமுன்தினம் குறித்த 150 செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு 'ஹைபிரிட்' ரொக்கெட், செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .