2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

விலை உயர்ந்த இராமாயண புத்தகம்

Mithuna   / 2024 ஜனவரி 21 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட ஒரு புத்தக விற்பனையாளர் ரூ.1.65 இலட்சம் மதிப்பிலான ராமாயண புத்தகத்தை கோயிலுக்குப் பரிசாக வழங்கவுள்ளார். இதுவே உலகில் உள்ள இராமாயண புத்தகங்களில் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து அந்த புத்தக விற்பனையாளரான மனோஜ் சாத்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: “வால்மீகி எழுதிய இராமாயணப் புத்தகம், கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாற்றை நமக்குக் கூறும் அருமையான புத்தகமாகும்.

தற்போது உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தை நான் உருவாக்கியுள்ளேன். இதன் மதிப்பு ரூ.1.65 லட்சமாகும். 3 அழகான பெட்டிகளில் அச்சிட்டு இந்தப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் 3 அடுக்குகளாக அமைவதைக் குறிக்கும் பொருட்டு 3 பெட்டிகளில் புத்தகம் தயாராகியுள்ளது.

இந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கான காகிதம் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காகிதம் மீது அமிலத்தை வீசினாலும் அழியாது. புத்தகத்தின் அட்டைப் பகுதியானது இறக்குமதி செய்யப்பட்ட கச்சாப் பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தை அச்சிடுவதற்கான மை, ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. புத்தகம் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் அமெரிக்காவிலுள்ள வால்நட் மரம், குங்குமப்பூ மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் எடை 45 கிலோ கிரமாக இருக்கும். இது 400 வருடங்கள் ஆனாலும் அழியாது.

நான்கு தலைமுறைகளுக்கும் மேல் இந்தப் புத்தகத்தை படிக்க முடிக்கும். தற்போது மிகவும் அழகான அயோத்தி நகரை அடைந்துள்ளோம். மிகவும் விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தைப் போலவே, அயோத்தி நகரும் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே அயோத்தியில் மிகவும் அழகிய ராமாயணம் இருக்கிறது என்று சொல்லலாம். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் வித்தியாசமான டிசைன்கள் இருக்கும். கோயில் நிர்வாகத்திடம் புத்தகத்தை விரைவில் வழங்கவுள்ளோம்” என மனோஜ் சாத்தி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .