2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 11 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லி;

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை மையமாக வைத்து, எதிர்வரும் 14ஆம் திகதி  முதல் மத்திய அரசாங்கத்துக்கு  எதிராக மக்கள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, காங்கிராஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:அடிப்பத் தேவைகள் உட்பட அனைத்து விஷயங்களிலும், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளில் உள்ள தோல்விகளே காரணம். காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெற்றோல், டீசல், சமையல் காஸ் விலை விண்ணை நோக்கி செல்கின்றன. இதன்வாயிலாக மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் மத்திய அரசாங்கம்  முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது உறுதியாகிறது. இதை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வகையில் பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

 

பிரசாரத்தின் ஒரு பகுதியாக முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கும் பாதயாத்திரை, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடைபெறும்.

இந்த விழிப்புணர்வு பிரசார பயணம் 14ஆம் திகதி துவங்கி, 29ஆம் திகதி முடிவுக்கு வரும். அடுத்ததாக, பாராளுமன்ற  குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. அப்போது மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் திரண்டு, இரு அவைகளிலும் மத்திய அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்போம். இவ்வாறு காங்கிரஸ் அறிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .