A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 20 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு வங்கம்;
இரண்டு நாள்கள் பயணமாக மேற்கு வங்கம் சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, அங்கு விவசாயி ஒருவரின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.
மேற்குவங்க மாநிலத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. கொல்கத்தா சென்ற அவருக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார்.
அதைத்தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் சிலைக்கும் மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மேதினிப்பூர் பகுதியில் பேரணியில் பங்கேற்க சென்ற அமித் ஷா, வழியில் பாலிஜுரி கிராமத்தில் உள்ள விவசாயி சனதன் சிங் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.
அவருடன் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, பாஜக தேசிய துணைத்தலைவர் முகுல் ராய் மற்றும் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் ஆகியோரும் மதிய உணவு சேர்ந்து சாப்பிட்டனர்.
30 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
07 Mar 2026