A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தால், உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படலாம்' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டசபை தேர்தல்உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்கள், போராட்டம் நடத்தி வருகின்றன.இவர்களுக்கு, மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்; இது, அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அதேநேரத்தில், முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி, மீண்டும் புத்துயிர் பெற, விவசாயிகள் போராட்டம் வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் மோடி அலையிலும், ஜாதிகளை ஒருங்கிணைக்கும், பா.ஜ.,வின் நடவடிக்கையாலும், ராஷ்ட்ரீய லோக்தளத்தின் ஆதரவு குறைந்தது.
விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ள பாரதிய கிசான் யூனியன் தலைவர் திகாயத், பா.ஜ.,வுக்கு எதிராக, விவசாயிகளையும், சிறுபான்மையினரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
'இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அது பா.ஜ.,வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்' என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago