A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த வன்முறைத் தொடர்ந்து, எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீண்டும் டில்லிக்குள் நுழைந்து விடாதபடி, பொலிஸார் பேரிகார்டுகளை அமைத்தும், தடுப்புச் சுவர் எழுப்பியும் பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், டில்லி- உ.பி. எல்லையான காசிப்பூரில் போராடும் விவசாயிகளை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் டில்லி யில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகியோர் சென்றனர். மல்லிகார்ஜுன கார்கே, ஹர்சிம்ரத் கவுர் பாதல், சுப்ரியா சுலே, சுகதா ராய் உள்ளிட்ட தலைவர்களும் சென்றனர்.
விவசாயிகளை எம்பிக்கள் சந்தித்தால் பிரச்சினை ஏற்படலாம் என்பதால், எம்பிக்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். விவசாயிகளை சந்திக்க தங்களை அனுமதிக்கும்படி பொலிஸ் அதிகாரிகளிடம் எம்பிக்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago