Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூன் 13 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி ஒரு சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் இறுதிச்சடங்குகள் முடிந்தன. இதன் பிறகாவது நடவடிக்கை இருக்குமா அல்லது மீண்டும் அலட்சியம்தானா என்ற கேள்வி ரெட்டியார்பாளையம் மக்களிடையே எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரெட்டியார்பாளையத்தில் கழிவறைக்குள் விஷவாயு தாக்கியதில் 15 வயது சிறுமி செல்வராணி, மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி மூவரும் உயிரிழந்ததால் ஏற்பட்ட அசாதாரண சூழல் இன்னும் மாறவில்லை. மூன்று பேரின் உடல்களும் உடற்கூராய்வுக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இவர்களின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
சிறுமி செல்வராணியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர், செந்தாமரை, காமாட்சி உடல்களுக்கும் இறுதி மரியாதைசெய்த பின், அவர்களின் வழக்கப்படி தகனம் செய்யப்பட்டது. இந்த மூன்று உயிர்களும் பறிபோன நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறுகிறார்.
அமைச்சர் நமச்சிவாயம் இதுதொடர்பாக கூறுகையில், “உரிய விசரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணையின் முடிவில் யார் இதற்கு காரணமானவானவர்களோ அவர்கள் மேல் உரிய நடவடிக்கையை இந்த அரசாங்கம் எடுக்கும்” என தெரிவித்துள்ளார். ஆனால் மக்களிடம் அச்சம் பரவியுள்ளது. விஷவாயு கசிந்து 3 பேர் உயிரிழந்ததால் வீட்டுக்குள் அச்சத்துடன் இருக்கிறார்கள் மக்கள். கழிவறை பக்கமே செல்லாமல் இருப்பதாக இவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறுகையில், “சற்று பயமாக இருக்கிறது. சமைக்கக்கூடாது என சொல்லிவிட்டார்கள். பின் மீண்டும் சமைக்கலாமா வேண்டாமா என எதுவும் சொல்லவில்லை. அருகில் இருப்பவர்களைக் கேட்டால் சமைக்கலாம் என்கிறார்கள். இருந்தாலும் ஒரு பயம்” என தெரிவித்துள்ளார்.
மூன்று பேரின் உயிரிழப்பால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதிக்கு அருகேவுள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தகரிப்பு செய்யும் நிலையத்தில் சுத்தகரிப்பு செய்யும் பழைய ஒப்பந்தக்காரை நீக்கிவிட்டு, லாஸ்பேட்டை கழிவு நீர் சுத்தகரிப்பு செய்யும் ஒப்பந்தக்காரை நியமித்து சுத்தகரிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகு அப்பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் மற்றும பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மூவரின் உயிரிழப்பு சம்பவத்தையொட்டி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் மரணம் என்ற பிரிவின் கீழ் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், மூவரின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே மேற்கொண்டு வழக்கின் தன்மை மாறுமா என்பது தெரியவரும் என்கின்றனர் சுகாதாரத்துரையினர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
26 minute ago
31 minute ago