2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வீட்டில் தீ விபத்து:சிறுவர்கள் உட்பட அறுவர் பலி

Freelancer   / 2024 டிசெம்பர் 18 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீரில், வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்,  சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

 காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் சிவா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், செவ்வாய்க்கிழமை (17) இரவு,  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இதில், வாடகை வீட்டில் வசித்து வந்தவர்களில் 10 பேர் வரை சிக்கி கொண்டனர்.

அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த 6 பேரில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். 

அத்துடன், நல்வர்  படுகாயமடைந்த நிலையில்,  சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றிய முதல் கட்ட விசாரணையில், புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X