Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 06 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டில் தனிமையில் இருந்த 42 வயதான பெண்ணொருவரை 3 பேர் கொடூரமாகத் தாக்கி, கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் குர்லா என்ற பகுதியில், கடந்த 30 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த பெண் தனிமையில் வீட்டில் இருப்பதை அறிந்துகொண்ட குறித்த மூவர், அண்பெண்ணின் அனுமதியின்றி அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதன் போது குறித்த மூவரும் பெண்ணின் கைகள், மார்பு பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளதோடு சிகரெட்டைக் கொண்டு தீக்காயத்தினையும் ஏற்படுத்தியுள்ளனர்.
அதே சமயம் மூவரில் ஒருவர் இச் சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளதோடு , ”இதனைப் பொலிஸாரிடம் தெரிவித்தால் குறித்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் ” என மிரட்டிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து அப் பெண் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், குறித்த மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .