2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வீரப்பன் மருமகன் வேட்பு மனுதாக்கல்

Mayu   / 2024 மார்ச் 28 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1ம் திகதி  வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் திகதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் திகதி தொடங்கியது. கடந்த 7 நாட்களாக அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.


இந்தநிலையில், அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பின் தலைவரும், வீரப்பனின் மருமகனுமான தர்மபுரியை சேர்ந்த அக்னி ஆழ்வார் மத்திய சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட புதன்கிழமை (27) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதன்போது அவர்  கூறியதாவது:-'என்னுடைய மாமா வீரப்பனின் கனவை நனவாக்குவ தற்காக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறேன். குறிப்பாக இலஞ்சத்தை ஒழித்து நல்லதொரு ஆரோக்கியமான சமுதாயத்தை படைப்பதற்காக கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை இந்தியா முழுவதும் 50-க்கும் மேற் பட்ட தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளேன்.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியிலும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியைம் எதிர்த்து போட்டியிட்டு இருக்கிறேன். இலஞ்சம் குறித்து விழிப்புணர்வு அளிப்பதற்காகவே பணமாலையை அணிந்து வந்துள்ளேன். என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X