2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வெடிப்பு சம்பவம்: பொறுப்பேற்றது காலிஸ்தான் அமைப்பு

Freelancer   / 2024 ஒக்டோபர் 21 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி - ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பாடசாலையில், ஞாயிற்றுக்கிழமை (20)  காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, காலிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானில் “ஜஸ்டிஸ் லீக் இந்தியா” என்ற பெயரில் இயங்கும்  டெலிகிராம் பக்கத்தின் ஊடாகவே, அவ்வமைப்பு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 அந்த பதிவில், டெல்லி குண்டுவெடிப்பு வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் கீழே “காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற குறியீடும் பதிவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, “இந்திய கோழை ஏஜன்சியும் [Indian coward agency] அதன் எஜமானர்களுக்கும் நமது உறுப்பினர்களை [காலிஸ்தான் ஆதரவாளர்களை] அமைதிப்படுத்த, நமது குரலை நசுக்க கேடுகெட்ட ரவுடிகளை பணம் கொடுத்து ஏற்பாடு செய்யலாம் என்று நினைக்கின்றனர்.

“அப்படி நினைத்தால் அவர்கள் முட்டாள்களின் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம் . நாம் அவர்களுக்கு எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறோம் என்றும், நம்மால் என்ன செய்ய முடியும் என்றும், அவர்களால் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது. நம்மால் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த முடியும்” என,  அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X