A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை:
டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட் டத்துக்கு வெளிநாட்டுப் பிரபலங்கள் கருத்து தெரிவிக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்து வரும், விவசாயிகள் போராட்டம் குறித்து, பிரபல பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு சச்சின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்து கொள்ள முடியாது. உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம்; பங்கேற்க முடியாது.
இந்தியாவில் உள்ளவர்களுக்கே இந்தியாவைப் பற்றி தெரியும். இந்தியர்களே முடிவு எடுப்பார்கள். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி உள்ளது.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago