Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய அரசு விதித்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் கைது செய்யப்படுவதுடன், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசாக்களை மத்திய அரசு உடனடியாக இரத்து செய்தது. சார்க் விசா வைத்துள்ளவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு ஏப்ரல் 26ஆம் திகதியுடன் முடிவடைந்தது. மருத்துவ விசாவில் வந்தவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு 29ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
வருகை, வணிகம், திரைப்படம், பத்திரிகையாளர், போக்குவரத்து, மாநாடு, அத்துடன், மலையேறுதல், மாணவர், பார்வையாளர், குழு சுற்றுலா, யாத்ரீகர் மற்றும் குழு யாத்திரை உள்ளிட்ட 12 பிரிவுகளில் விசாக்களை பெற்று இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் ஏப்ரல் 27ஆம் திகதியுடன் வெளியேறியிருக்க வேண்டும்.
இந்நிலையில் காலக்கெடுவுக்கு பின்னரும் இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர். கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ள குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025இன் படி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அதிகபட்சம் ரூ.3 இலட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாகவும் பெற்றுத்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago