A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருத்தணி;
திருத்தணியில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது; இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த விவகாரம், தி.மு.க.,வுக்குள்ளும் பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. அந்த கட்சியின் எம்.பி., ஜெகத்ரட்சகன் தான், ஸ்டாலினுக்கு வேல் வழங்க ஏற்பாடு செய்தாராம். இது குறித்து, தி.மு.க., மூத்த தலைவர்கள் சிலர், ஜெகத்ரட்சகனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 'வீட்டிற்குள் வேல் வைத்திருக்கக் கூடாது என்கின்றனர். இதனால், தலைவருக்கு எதுவும் பிரச்சினை வருமா' என, அவர்கள் கேட்டுள்ளனர். 'வேலை தண்ணீருக்குள் போட்டு விட்டால், எந்த பிரச்சினையும் வராது' என, பதில் அளித்துள்ளார் ஜெகத்ரட்சகன். தேவையில்லாமல் இந்த விவகாரத்தை எழுப்பியதற்காக, ஜெகத்ரட் சகனிடம், சிலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
ஜெகத்ரட்சகன், நாலாயிர திவ்ய பிரபந்த நூலுக்கு பொழிப்புரை எழுதியவர். பக்தியில் அதிக நாட்டம் உடையவர். தி.மு.க.,வுக்கு, ஹிந்துக்கள் மீது மரியாதை உண்டு என சொல்வதற்காக, ஒரு முறை திருப்பதியிலிருந்து பண்டிதர்களை வரவழைத்து, கருணாநிதி முன், ஸ்லோகங்கள் சொல்ல வைத்தவர். 'கட்சி தலைமையின் அனுமதி இல்லாமல், வேல் விவகாரத்தில், இவர் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை' என்கின்றனர்,
40 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago
09 May 2026