Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 08 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவில் சில மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையை நாட கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், அனைத்து மக்களிடையேயும் நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவுவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம். காய்ச்சல் அல்லது நோய் தொற்றின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெற வேண்டும். இந்த பாதிப்பில் காய்ச்சல், தலைவலி, நினைவாற்றல் இழப்பு, தசைவலி உள்ளிட்ட பெரும் பாதிப்புகள் உண்டாகக்கூடும்| என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு நோய்களுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்த தொற்றால் இறப்பு விகிதம் ஓப்பிட்டளவில் குறைவு தான் என்றாலும் இதற்கான தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்து என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், சுகாதாரம் என்பதே முக்கியமான ஒன்றாக உள்ளது. மக்களும் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூலெக்ஸ் என்ற நுளம்பு வகை மூலம் பரப்பப்படும் இந்த காய்ச்சல், 1937ஆம் ஆண்டு உகாண்டாவில் கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு தான் கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில், 2019இல் மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவன் இந்நோய்த்தொற்றால் உயிரிழந்தான்.
இதனைத் தொடர்ந்து 2022இல் திருச்சூர் மாவட்டத்தில் 47 வயதுமிக்க ஒருவர் மரணமடைந்தார் என்பதால் கேரள அரசு இந்த காய்ச்சல் பரவ தொடங்கியதை உறுதி செய்ததும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கையில் களம் கண்டுள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago