2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

வேளாண் சட்டங்கள்; தமிழ், பிராந்திய மொழிகளில் கடிதம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 20 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்து விவசாயிகளுக்கு தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் எழுதியுள்ளார்.

டில்லியில் விவசாயிகள் கடந்த 3 வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், அவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

வேளாண் துறையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களைப் பல விவசாய அமைப்புகள் வரவேற்றுள்ளன. அவற்றால் அவர்கள் நம்பிக்கை பெற்றுள்ளனர். ஆனால், மறுபுறத்தில் வேளாண் சட்டங்கள் குறித்து சில விவசாய அமைப்புகள் மாயையை உருவாக்கியுள்ளன.

சட்டங்கள் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டியது எனது கடமையாக உள்ளது. புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) அடிப்படையிலான கொள்முதல், சாதனை அளவை எட்டியுள்ளது; கொள்முதல் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எம்எஸ்பி நடைமுறை கைவிடப்படும் என விவசாயிகளிடம் சிலர் பொய் கூறி வருகின்றனர்.

அரசியல் ஆதாயத்துக்காக சிலர் பரப்பும் இதுபோன்ற அப்பட்டமான பொய்களை விவசாயிகள் அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எம்எஸ்பி நடைமுறையை அரசு ஒருபோதும் கைவிடாது. அது தொடர்ந்து அமுலில் இருக்கும்.

  வேளாண் விளைபொருள்களை விரும்பிய இடத்தில் விற்பதற்கான உரிமையை விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் விவாதிக்கப்பட்டது.

அடுத்து மத்தியில் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசும் இந்தச் சீர்திருத்தங்களை ஆதரித்தது. இதுமாதிரியான சீர்திருத்தங்கள் இல்லாமல், விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது சிரமம் என்று வேளாண் நிபுணர்களும் தெரிவித்து ள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .