Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவில் சுகாதாரத்துறை சார்பில் பொது மக்களின் நலன் கருதி 'இ சஞ்சீவினி' என்ற மருத்துவ பரிசோதனை திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவர்களால் ஒன்லைனில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெண் வைத்தியர் ஒருவர் வழக்கம் போல் ஒன்லைனில் மருத்துவ ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது ,21 வயதான இளைஞர் ஒருவர் திடீரென தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக வைத்தியர் முன்னிலையில் காட்சியளித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வைத்தியர் உடனடியாகத் தனது ஒன்லைன் இணைப்பைத் துண்டித்துள்ளார். பின்னர் இதுகுறித்து சைபர் கிரைம் மற்றும் ஆரன்முளா பொலிஸ் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்தபொலிஸார், குறித்த இளைஞரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Jul 2025
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jul 2025
21 Jul 2025