A.K.M. Ramzy / 2021 மார்ச் 16 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜார்கிராம்,
மேற்கு வங்காளத்தின் ஜார்கிராம் மாவட்டத்தில் நேற்று பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் கடைசி நேரத்தில் அவரால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
எனவே இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனினும் மெய்நிகர் முறையில் பேசிய வீடியோ ஒன்று அங்கு ஒளிபரப்பப்பட்டது. அதில், தனது ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக நேரடியாக பங்கேற்க முடியவில்லை எனவும், அதற்காக இதன் பின்னணியில் எந்த சதியும் இருப்பதாக நான் கூறமாட்டேன் என்றும் மம்தாவை மறைமுகமாக சாடியிருந்தார்.
ஆனால் ஜார்கிராம் கூட்டத்தில் மக்கள் கூட்டம் குறைவு என்பதாலேயே அமித்ஷா இந்த கூட்டத்தை வேண்டுமென்றே புறக்கணித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டினார்.
ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் வீடியோ பதிவு ஒன்றை அமித்ஷா தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அத்துடன், ஹெலிகாப்டர் பழுது காரணமாக இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாததற்கு வருத்தமும் தெரிவித்து இருந்தார்.
17 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago