2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (06.08.2013)

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (06.08.2013)
 
மேடம்
சகோதர வழியில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : முயற்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை
 
 
இடபம்
நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பார்கள். பணியில் அனுபவம் மிக்க வேலையாட்கள் கிடைப்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கிருத்திகை 2, 3, 4: ஆலோசனை
ரோகிணி : நன்மை
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
 
 
மிதுனம்
பணியில் புதிய பொறுப்புக்களை ஏற்பீர்கள். இல்லத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஒரு நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3 : லாபம்
திருவாதிரை : மகிழ்ச்சி
புனர்பூசம் : இன்பம்
 
 
கடகம்
வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். இல்லத்தில் மருத்துவ செலவுகள் வந்து போகும்.
உழைப்பால் உயர்வீர்கள்.
புனர்பூசம் : பயம்
பூசம் : துன்பம்
ஆயில்யம்: லாபம்
 
 
சிம்மம்
உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மனதில் தைரியத்துடன் எதையும் செய்வீர்கள். பதவியில் அதிகாரத்தில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.
மகம்: இன்பம்
பூரம்: தேர்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
கன்னி
கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் உதவியால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இல்லத்தில் அமைதி திரும்பும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்
 
 
துலாம்
வியாபாரத்தில் விரையம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தங்களுடைய மறதியால் சில வீண் பிரச்சினைகள் வந்து போகும். யாரையும் நம்பி எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி: லாபம்
விசாகம் 1, 2, 3: பயம்
 
 
விருட்சிகம்
திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வாகனங்கள் அடிக்கடி தொந்தரவுகளைக் கொடுக்கும். சங்கடங்கள் ஏற்படும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: துக்கம்
கேட்டை: மகிழ்ச்சி
 
 
தனுசு
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் பக்குவம் உங்களிடத்தில் காணப்படும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும்.
மூலம்: லாபம்
பூராடம்: அமைதி
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
மகரம்
மற்றவர்களுக்கான செலவுகளை தாங்களே முன் நின்று செய்வீர்கள். காணாமல்போன பொருள் ஒன்று கைக்கு கிடைக்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: லாபம்
 
 
கும்பம்
புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். சில முக்கியமான பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு உயரும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 
 
மீனம்
உங்களுடைய பணி சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும். மற்றவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மறைமுகமான எதிரிகளை சந்திக்க நேரிடும்.
பூரட்டாதி 4: துன்பம்
உத்திரட்டாதி: சிந்தனை
ரேவதி: வேதனை

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .