2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (08.08.2013)

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (08.08.2013)
 
மேடம்
அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பெண்கள் வழியில் உள்ள உறவினர்களிடையே மதிப்பு கூடும்.
அஸ்வினி : ஆர்வம்
பரணி : இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
இடபம்
எங்கு சென்றாலும் உங்களுடைய மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடைய மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும்.
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி : நன்மை
மிருகசீரிடம் 1, 2 : மகிழ்ச்சி
 
 
மிதுனம்
அரசு துறையில் உள்ளவர்கள் சில விடயங்களை சாதித்துக் காண்பிப்பீர்கள். ஆண்பிள்ளைகளிடம் அலட்சியப்போக்கு காணப்படும். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வழிகள் பிறக்கும்.
மிருகசீரிடம் 2, 3 : மகிழ்ச்சி
திருவாதிரை : நஷ்டம்
புனர்பூசம் : இன்பம்
 
 
கடகம்
வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். பழைய பொருட்களை உங்களுடைய ரசனைக்கு தகுந்தபடி மாற்றிக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
புனர்பூசம்: செலவு
பூசம் : மகிழ்ச்சி
ஆயில்யம்: வரவு
 
 
சிம்மம்
பெண்களின் தேவைகளை பெற்றோர்கள் பூர்த்தி செய்வார்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகள், தகுதி ஆகியவைகளை மீண்டும் பெறுவீர்கள். சில தவறான நண்பர்களை அடையாளம் காணுவீர்கள்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம் : கவனம்
 
 
கன்னி
சில பெரிய பொறுப்புக்கள் தேடி வரும். மற்றவர்களுடைய கருத்துக்களை கேட்டு தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயல்வார்கள்.
உத்திரம் 2, 3, 4: பொறுப்பு
அஸ்தம்: மாற்றம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயம்
 
 
துலாம்
பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். உடலில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கப் பெறுவீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: திறமை
 
 
விருட்சிகம்
உங்களிடம் ஒருவிதமான தெளிவு காணப்படும். எதிர் மறையான எண்ணங்கள் விலகும். தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.
விசாகம் 4: தெளிவு
அனுசம்: முயற்ச்சி
கேட்டை: லாபம்
 
 
தனுசு
சில மறைமுகமான எதிர்ப்புக்கள் விலகும். திருமணம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நாடாளுபவர்களின் அன்பு கிடைக்கப் பெறுவீர்கள்.
மூலம்: உதவி
பூராடம் : இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை
 
 
மகரம்
உத்தியோகத்தில் சின்ன சின்ன எதிர்ப்புக்கள் இருக்கும். அதிரடி மாற்றங்கள் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4: துன்பம்
திருவோணம்: லாபம்
அவிட்டம் 1, 2: சிக்கனம்
 
 
கும்பம்
குடும்ப நண்பர்களின் இல்ல நிகழ்வுகளில் கலந்து கொண்டு மங்கலப் பொருள்கள் பெற்று மகிழ்வீர்கள்.  உற்சாகமாக செயல்பட்டு உயர்வான பலன்களைப் பெறுவீர்கள். எதிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
அவிட்டம் 3, 4: விருந்து
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி
 
 
மீனம்
நிலம், சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனக் குழப்பங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் நீங்கும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : லாபம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .