2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (10.03.2012)

A.P.Mathan   / 2012 மார்ச் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (10.03.2012)

மேடம்
பிறரிடம் உதவியை நாடுதல், வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல், தலைவலி ஆகியவை உண்டாகும்.
அஸ்வினி: உதவி
பரணி: துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


இடபம்
உற்சாகமான சூழ்நிலை காணப்படும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் ஏற்படும். நல்லவர்களின் சேர்க்கை உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: உற்சாகம்
ரோகிணி: இன்பம்
மிருகசீரிடம் 1, 2: வெற்றி


மிதுனம்
நண்பர்களிடையே அன்யோன்யம் பலப்படும். நிறைவான உணவு, உறக்கம் கிடைக்கும்.   மனதால் அலைச்சல் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: அலைச்சல்


கடகம்
நீண்டதூர பிரயாணத்தை மேற்கொள்ளுதல். பணவரவு அதிகரித்தல். பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: சந்தோஷம்
ஆயில்யம்: கவனம்


சிம்மம்
வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணத்தட்டுப்பாடு ஏற்படும், அலைச்சல் தோன்றி மறையும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: கஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம்


கன்னி 
களவு போகும் சூழ்நிலை உருவாகும், இதனால் பயம் தோன்றும். வீண் அலைச்சல்கள் உண்டாகும், இதனால் மனம் சஞ்சலமடையும்.
உத்திரம் 2, 3, 4: சிரமம்
அஸ்தம்: துக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்


துலாம்
உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டி காணும் சூழல் உருவாகும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைதல், வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: வெற்றி
விசாகம் 1, 2, 3: இன்பம்


விருட்சிகம்
இடம்விட்டு வேறு இடம் மாறுதல், பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
விசாகம் 4: இடமாற்றம்
அனுசம்: இன்பம்
கேட்டை: மகிழ்ச்சி


தனுசு
வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணத்திற்கு தட்டுப்பாடு காணப்படும். அலைச்சல்கள் உண்டாகும். சாதனைகள் வெற்றியடையும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: பிரச்சினை
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி


மகரம்
முயற்சியில் தோல்விகள் காணப்படும். துக்கமான நிகழ்வுகள் உண்டாகும். வீண் அலைச்சல் காணப்படும். செயல்களில் தவறுகள் நிகழும்.
உத்திராடம் 2, 3, 4: தோல்வி
திருவோணம்: துக்கம்
அவிட்டம் 1, 2: துன்பம்


கும்பம்
உடல் நிலை சோர்வு காணப்படும், மனதில் குழப்பமான சூழல்கள் காணப்படும்,    பெண்களுடன் விவாதங்கள் உண்டாகும்.
அவிட்டம் 3, 4: உடல் நிலை நலிவு
சதயம்: குழப்பம்
பூரட்டாதி 1, 2, 3: விவாதங்கள்


மீனம்
வெளியூர்களுக்கு பிரயாணம் செல்லும் சூழ்நிலை உருவாகும், இதனால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும் நிலை உருவாகலாம்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: லாபம்
ரேவதி: மகிழ்ச்சி
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .