Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 பெப்ரவரி 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (11.02.2012)
மேடம்
தூய்மையான ஆடை அணிதல், உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகள் ஏற்படும்.
அஸ்வினி: உற்சாகம்
பரணி: இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
அனாவசிய பேச்சுக்களால் பிரச்சினைகள், வீண் அலைச்சல் ஏற்பட்டு செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்
மிதுனம்
உறவினர் மற்றும் நண்பர்களின் வருகை, இதனால் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டவைகளில் ஈடுபடும் நிலை உருவாகும், செலவுகள் அதிகமாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: செலவுகள்
கடகம்
அனாவசியமாக செலவிடுதல், உண்ணும் உணவில் வெறுப்பு, இதனால் வயிற்றுவலி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும்.
புனர்பூசம்: வெறுப்பு
பூசம்: செலவு
ஆயில்யம்: வயிற்றுவலி
சிம்மம்
சகோதரர் மற்றும் சகோதரிகளின் வருகை ஏற்படும், இதனால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். நல்ல உறக்கம் உண்டாகும்.
மகம்: உறவினர் வருகை
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: உறக்கம்
கன்னி
புண்ணிய செய்திகள் கேட்டல், இதனால் மனம் சாந்தியடைதல். விசித்திரமான, ஆச்சர்யமான பொருள் காணல்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி;
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்
துலாம்
எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும். வேண்டாத அலைச்சல், செய்யும் செயல்களில் தவறுகள் ஆகியவை காணப்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அலைச்சல்
சுவாதி: தவறுகள்
விசாகம் 1, 2, 3: தோல்வி
விருட்சிகம்
வேண்டாதவர்கள் மற்றும் தீயவர்களின் நட்பு ஏற்படுதல், இதனால் நஷ்டமடைதல். இதனால் சிலவிதமான சிக்கல்கள் ஏற்படுதல்.
விசாகம் 4: கஷ்டம்
அனுசம்: துன்பம்
கேட்டை: துக்கம்
தனுசு
அரசாங்கத்தினரால் ஆதாயம் காணப்படும். எடுத்த காரியத்தில் வெற்றியடைதல். மனமகிழ்ச்சி உண்டாகும்.
மூலம்: லாபம்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம்
மகரம்
கைவிட்டுப்போன பொருள் மீண்டும் கிடைத்தல், கடினமான பேச்சுவார்த்தைகளால் மனதில் கஷ்டமான சூழ்நிலை உருவாகும்.
உத்திராடம் 2, 3, 4: கஷ்டம்
திருவோணம்: துன்பம்
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
கும்பம்
இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகும்;. தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். சில சமயம் பணத்தட்டுப்பாடுகள் காணப்படும்.
அவிட்டம் 3, 4: ஆர்வம்
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: கஷ்டம்
மீனம்
வீட்டில் திருட்டு போகலாம், எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வேண்டாத பேச்சுக்களால் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும்.
பூரட்டாதி 4: துக்கம்
உத்திரட்டாதி : துன்பம்
ரேவதி: பயம்
14 minute ago
19 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
24 minute ago
30 minute ago