2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பங்குச்சந்தை (11.10.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பங்குச்சந்தை (11.10.2014)
 
மேடம்
எந்தவொரு விடயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. போக்குவரத்துக்களில் கவனம் தேவை. தொழில் சம்மந்தமாக பிரயாணங்கள் லாபத்தைக் கொடுக்கும். 
அஸ்வினி : சிரமங்கள்
பரணி : துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: லாபம்
 
 
இடபம்
உடல் நிலையில் சிறிது பாதிப்புக்கள் உண்டாகும். பணிகளை ஆர்வமின்றியே செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் தடைப்படும்.  
கிருத்திகை 2, 3, 4: துக்கம் 
ரோகிணி : கஷ்டம்
மிருகசீரிடம் 1, 2: துன்பம் 
 
 
மிதுனம் 
பல புதிய பொருட்களை பரிசாக பெறுவீர்கள். நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறப் பெறுவீர்கள். சில  தவிர்க்க முடியாத செலவுகள் உண்டாகும். 
மிருகசீரிடம் 2, 3 : கஷ்டம்
திருவாதிரை : மகிழ்ச்சி
புனர்பூசம் : முயற்சி
 
 
கடகம்
சில முக்கியமான பணிகளுக்காக உங்களுடைய சேமிப்புக்கள் குறையும். வெளியூர் பிரயாணங்களினால் சில புதிய பணி வாய்ப்புக்கள் உண்டாகலாம். மாணவர்கள் அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. 
புனர்பூசம் : பயம்
பூசம் : துன்பம் 
ஆயில்யம் : துக்கம்
 
 
சிம்மம்
சாதாரணமான பேச்சுக்கள் சண்டையில் முடிந்து விடும். எனவே வார்த்தைகளில் கவனம் தேவை. சில அவசியமான தவிர்க்க முடியாத செலவுகள் உண்டாகும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். 
மகம்: துன்பம் 
பூரம்: செலவுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: கஷ்டம் 
 
 
கன்னி
இல்லத்தில் சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். மேலதிகாரிகளிடையே சுமூகமான நிலை காணப்படும். காணாமல் போன பொருட்கள் கைக்கு வந்து சேரும். 
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி 
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
 
 
துலாம்
பணியில் பதவி உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். புதிய முதலீடுகளுக்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவீர்கள். பொழுது போக்கு சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : லாபம்  
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
விருட்சிகம்
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் நிலையில் சிறிது பாதிப்புக்கள் காணப்படும். பணியாளர்களுடன் சிறிது சங்கடமான சூழ்நிலைகள் உருவாகலாம். 
விசாகம் 4: துன்பம் 
அனுசம்: துக்கம் 
கேட்டை: பிரச்சினை
 
 
தனுசு
புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பணவிடயத்தில் கட்டுப்பாடுகள் தேவை. சில முக்கியமான முடிவுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. 
மூலம்: அலைச்சல்
பூராடம்: தவறுகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: கஷ்டம்
 
 
மகரம்
புதிய நண்பர்களின் மூலம் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய பணி நியமனத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். 
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி 
திருவோணம்: இன்பம் 
அவிட்டம் 1, 2: அலைச்சல்
 
 
கும்பம்
உடன் பிறந்த சகோதரிகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரலாம். இடமாற்றங்கள் நல்ல மனமாற்றத்தைக் கொடுக்கும். விருந்துகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் உண்டாகும். 
அவிட்டம் 3, 4: இன்பம் 
சதயம் : இன்பம் 
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 
 
மீனம்
வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்புக்கள் உண்டாகும். முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். வியாபாரத்தில் பண லாபங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். 
பூரட்டாதி 4:  இன்பம்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சி 
ரேவதி : லாபம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .