2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (12.06.2014)

A.P.Mathan   / 2014 ஜூன் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (12.06.2014)

மேடம்
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். எந்த காரியத்தையும் துரிதமாக செய்ய நினைப்பீர்கள்.
அஸ்வினி : நலம்
பரணி : மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: கவனம்


இடபம்
இல்லத் தேவைகள் அதிகமாகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கிருத்திகை 2, 3, 4: தேவை
ரோகிணி : குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: கஷ்டம்


மிதுனம்
நட்பு வட்டம் விரியும். பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். தொலை தூர பயண வாய்ப்புகள்கள் உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: லாபம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: பயணம்


கடகம்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய பதவிகளுக்கான அறிகுறிகள் தோன்றும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி 
பூசம்: வரவு
ஆயில்யம்: இன்பம்


சிம்மம்
குறை கூறியவர்கள் பாராட்டும் நாள். தொழில் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புக்கள் உங்களிடமே வந்து சேரும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: கவலை
உத்திரம் 1ஆம் பாதம்: பொறுப்பு


கன்னி
விரயங்கள் அதிகரிக்கும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே நடைபெறும். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவு உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: விரயம்
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: பராமரிப்பு


துலாம்
திருமண பேச்சு முயற்சி வெற்றி தரும். வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பர். தொழில் ரீதியான பயணங்கள் உண்டாகும். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: பயணம்


விருட்சிகம்
நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். தொழிலுக்கு உறுதுணையான தகவல்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வெளிவட்டார பழக்கம் விரிவடையும்.
விசாகம் 4: வரவு
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: லாபம்


தனுசு
மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டுக் கொள்வது நல்லது. நெடுநாள் ஆசை நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மூலம்: ஆலோசனை
பூராடம்: வரவு
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்


மகரம்
பெற்றோர் வழியில் பிரியம் கூடும்.புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.பொது காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
உத்திராடம் 2, 3, 4: தனலாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2 : இன்பம்   


கும்பம்
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வளர்ச்சிக்கு உதவியவர்களை சந்திப்பீர்கள்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்


மீனம்
காரியங்களை வெற்றி கரமாக முடிக்கும் நாள். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். தொழில் ரீதியாக எடுத்த முடிவு நல்ல பலன்களைத்தரும்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி : அமைதி
ரேவதி : முன்னேற்றம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .