Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 பெப்ரவரி 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (14.02.2012)
மேடம்
இசையில் ஆர்வம் உண்டாகும். வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்;, மனதில் கஷ்டமான சூழ்நிலைகள் உண்டாகலாம்.
அஸ்வினி : துக்கம்
பரணி: ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: கவலை
இடபம்
உடல் நிலை பாதிக்கப்படுதல். சாப்பாட்டில் வெறுப்பு ஏற்படுதல். இதனால் வீணான மருத்துவ செலவுகள் காணப்படும்.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி: வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: துன்பம்
மிதுனம்
நல்லவர்களின் சேர்க்கை, சகோதரர் சகோதரிகளின் வருகை, இதனால் மகிழ்ச்சி, நல்ல தூக்கம் உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: துக்கம்
கடகம்
மனதில் குழப்பம் மற்றும் மனக்கசப்புகள் உண்டாகும். பெண்களுடன் விவாதங்கள்;, பிரச்சினை மேலும் துன்பம் உண்டாகும்.
புனர்பூசம்: கவலை
பூசம்: விவாதம்
ஆயில்யம்: துன்பம்
சிம்மம்
இல்லத்தில் உள்ள பெண்களினால் மகிழ்ச்சி உண்டாகும். சுவையான உணவு உண்பீர்கள், இன்பம் ஏற்படும், ஆலயங்களுக்கு தரிசனம் செய்ய செல்வீர்கள்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: தரிசனம்
கன்னி
வேண்டாத உணவினால் வயிற்றில் பிரச்சினைகள் உண்டாகும், வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம். மேல் அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பிரச்சினை ஏற்படலாம்.
உத்திரம் 2, 3, 4: பிரச்சினை
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயணம்
துலாம்
எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். தனலாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தனலாபம்
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: வெற்றி
விருட்சிகம்
வீணான அலைச்சல்கள் உண்டாகும், காரியங்கள் அனைத்திலும் தடைகள் காணப்படும். வியாபாரத்தில் பிரச்சினை உண்டாகும்.
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: துன்பம்
கேட்டை: கஷ்டம்
தனுசு
இடம்விட்டு இடம்மாறும் சூழ்நிலைகள் உருவாகலாம். மகான்களின் தரிசனம் மற்றும் ஆலய தரிசனம் கிடைக்கப்பெறுவீர்கள்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: கஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
மகரம்
அதிக பணலாபம் கிடைக்கும், முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்;கள்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
கும்பம்
மனதில் உற்சாகம் பிறக்கும். நல்லவர்களின் சேர்;க்கை மேலும் நல்லகாரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும்;.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
மீனம்
காணாமல்போன பொருள் மீண்டும் கிடைத்தல். இதனால் மனம் அமைதியடைதல்.
புண்ணிய செய்திகள் உங்களைத் தேடி வரும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி
11 minute ago
16 minute ago
21 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
21 minute ago
27 minute ago