மேடம்
விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். புதியவர்களின் அறிமுகம் கிட்டும். நண்பர்களின் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
அஸ்வினி : வெற்றி
பரணி : அறிமுகம்
கிருத்திகை 1ஆம் பாதம் : நன்மதிப்பு
இடபம்
இல்லத்தில் மூத்தவர்களின் ஆலோசனை கை கொடுக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வழிபாடுகளில் மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: ஆலோசனை
ரோகிணி : இன்பம்
மிருகசீரிடம் 1, 2: ஆரோக்கியம்
மிதுனம்
அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை உருவாகலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடலாம்.
மிருகசீரிடம் 2, 3: அனுசரிப்பு
திருவாதிரை: யோசனை
புனர்பூசம்: மறதி
கடகம்
நட்பால் நல்ல காரிம் நடைபெறும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும்.விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.
புனர்பூசம்: இன்பம்
பூசம் : சிந்தனை
ஆயில்யம்: வரவு
சிம்மம்
வெற்றிச்செய்தி வீடு வந்து சேரும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மகம்: வெற்றி
பூரம்: வளர்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: அரசியல்
கன்னி
வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். மைத்துனர்கள் வருகையால் கலகலப்பு அதிகரிக்கும். தொலைபேசி வழி செய்தி மகிழ்ச்சியைத் தரும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: வருகை
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
துலாம்
சகோதர ஒற்றுமை பலப்படும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : ஒற்றுமை
சுவாதி : சந்திப்பு
விசாகம் 1, 2, 3: வரவு
விருட்சிகம்
மதிப்பு மிக்கவர்களின் உதவி கிட்டும். நண்பர்களின் ஆதரவு தொழிலுக்கு உதவியாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
விசாகம் 4: உதவி
அனுசம்: ஆதரவு
கேட்டை: வளர்ச்சி
தனுசு
பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மூலம்: கவனம்
பூராடம்: கோபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆரோக்கியம்
மகரம்
குடும்ப சுமை கூடும் நாள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழிலில் விரயங்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
உத்திராடம் 2, 3, 4: செலவு
திருவோணம்: கவனம்
அவிட்டம் 1, 2: விரயம்
கும்பம்
பொருள் வரவிற்கு அஸ்திவாரமிடுவீர்கள். புதியவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்.
அவிட்டம் 3, 4 : நலம்
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
மீனம்
புண்ணிய காரியங்களுக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். நூதன பொருட்கள் சேர்க்கை உண்டு.
பூரட்டாதி 4 : மகிழ்ச்சி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : இன்பம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.