2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (19.01.2014)

Menaka Mookandi   / 2014 ஜனவரி 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்றைய பலன்கள் (19.01.2014)


மேடம்
செய்யும் தொழிலில் மேலும் சில புதிய உக்திகளைச் செலுத்துவீர்கள். புதிய பணி வாய்ப்புக்கள் தேடி வரும். வரவுக்கேற்ற செலவுகள் காணப்படும்.
அஸ்வினி: ஆர்வம்
பரணி: கவலை
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


இடபம்
புதிய ஆடைகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஆன்மீக காரியங்கள் செய்வதற்கு மனதில் ஆர்வம் காணப்படும். புதிய முதலீடுகளுக்கான யோசனைகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி


மிதுனம்
வியாபாரத்தில் சில புதிய  போட்டிகள் காணப்படும். பண விஷயத்தில் கவனம் தேவை. அயல்தேசங்களிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: துக்கம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: மகிழ்ச்சி


கடகம்
மனதில் உற்சாகம் காணப்படும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.  வியாபார சம்மந்தமாக பயணங்கள் சோர்வுடையதாய் இருக்கும்.
புனர்பூசம்: சோர்வு
பூசம்: மகிழ்ச்சி
ஆயில்யம்: இன்பம்


சிம்மம்
செய்யும் செயல்கள் வெற்றியைத் தழுவும் . புதிய முயற்சிகள் சிறு  அலைச்சல்களைக் கொடுக்கும் . அயலாருடைய உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும் .
மகம்: அலைச்சல்
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம்: உதவி


கன்னி
உஷ்ணம் காரணமாக உடலில் புண்கள் உண்டாகலாம்.  தங்களது  உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். வீணான சிரமங்கள் தோன்றும்.
உத்திரம் 2, 3, 4: சிரமம்
அஸ்தம்: பயம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்


துலாம்
நண்பர்களுடன் சுற்றுலா வாய்ப்புக்கள் தேடி வரும். விருந்துகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி  உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: அலைச்சல்


விருட்சிகம்
தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.  கையில் இருக்கும் பணத்திற்கு தகுந்த செலவுகளை மேற்கொள்வது நல்லது. வெளிவட்டார பழக்கங்களால் வீண் அலைச்சல் மற்றும் செலவுகள் ஏற்படும்.
விசாகம் 4: முயற்சி
அனுசம்: சிக்கனம்
கேட்டை: அலைச்சல்


தனுசு
காரணமற்ற வெறுப்பும் சோர்வும் காணப்படும். எதிர்கால சிந்தனைகள் சற்று அதிகமாகவே காணப்டும்.  எதிர்பார்த்த உதவிகள் சற்று கால தாமதத்தை உண்டாக்கும்.
மூலம்: உதவி
பூராடம்: கஷ்டம்
உத்திராடம் 1ம்பாதம்: சோர்வு


மகரம்
நிதி நிலைமையில் சற்று எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.  எதைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. செயல்களில் சற்று நிதானம் அவசியம்.

உத்திராடம் 2, 3, 4: செலவுகள்
திருவோணம்: துன்பம்
அவிட்டம் 1, 2: துக்கம்.


கும்பம்
பெண்களினால் உதவி மற்றும் இன்பம் கிடைக்கும் . சில சந்திப்புக்கள் மனநிறைவைக்கொடுக்கும். புதிய அறிமுகங்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அவிட்டம் 3, 4ஆம்
பாதம்: விருந்து
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி


மீனம்
தெய்வீக பணிகளுக்கான செயல்களை எதிர்பார்க்கலாம். பண வரவுகள் தாமதப்பட்ட போதும் கிடைக்கப்பெறுவீர்கள். பெற்றோரின் உதவிகள் மிகுந்த பயனைத்தரும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: கவனம்
ரேவதி: இலாபம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .