மேடம்
மனதில் கவலை உணர்வு அதிகரிக்கும். பழைய வியாபாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு பொருள் சேர்க்கை உண்டாகும்.
அஸ்வினி : கவலை
பரணி : லாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
இடபம்
தொடங்குகின்ற செயல்கள் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி காணப்படும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : நட்பு
மிருகசீரிடம் 1, 2: இன்பம்
மிதுனம்
மனதில் சிறு அளவிலான நம்பிக்கை குறைவு ஏற்படும். தவிர்க்க முடியாத வகையில் புதிய இனங்களில் பணச்செலவு காணப்படும். உணவுப்பொருட்களின் தரம் அறிந்து உண்ண வேண்டும்.
மிருகசீரிடம் 2, 3: கவலை
திருவாதிரை: செலவு
புனர்பூசம்: கவனம்
கடகம்
எவரிடமும் அதிக நேரம் பேசுவதைத் தவிர்க்கவும். வியாபார மந்த கதியை சரிசெய்ய நண்பரின் உதவி கிடைக்கும். வரவு செலவுகளில் சிக்கனம் பின்பற்ற வேண்டும்.
புனர்பூசம் : கவனம்
பூசம் : இன்பம்
ஆயில்யம் : சிக்கனம்
சிம்மம்
வெகுநாள் விருப்பம் நிறைவேற அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும்.
மகம்: பயணம்
பூரம்: செலவுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: ஆதாயம்
கன்னி
மிகுந்த பொறுமை குணத்துடன் செயல்படுவது நல்லது. அரசு உதவி பெற அனுகூலம் ஏற்படும். எதிர்கால தேவைக்கு பணம் சேமிப்பீர்கள்.
உத்திரம் 2, 3, 4: பொறுமை
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
துலாம்
உங்களின் எதார்த்த பேச்சை சிலர் தவறாக அர்த்தம் கொள்வர். நிதானம் பின்பற்றுவதால் சிரம சூழ்நிலை உருவாகாமல் தவிர்கலாம். சேமிப்பை முக்கிய காரியங்களுக்கு பயன்படுத்துவீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : சிரமம்
சுவாதி : கவனம்
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
விருட்சிகம்
விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொழிலில் கூடுதல் பணிச்சுமை உண்டாகும். வாகனத்தில் செல்லும் பொழுது மித வேகம் பின்பற்றுவது நல்லது.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: கவனம்
கேட்டை: பயணம்
தனுசு
மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். வீடு, வாகன வகையில் அபிவிருத்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்
மகரம்
மற்றவர்களுடைய பொருட்களுக்கு பேரம் பேசுவதால் அதிருப்தி ஏற்படலாம். தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை தர வேண்டாம். தொழில் இலக்கை அடைய அதிக சிரமப்பட வேண்டியிருக்கும்.
உத்திராடம் 2, 3, 4: கவனம்
திருவோணம்: சிரமம்
அவிட்டம் 1, 2: அலைச்சல்
கும்பம்
எதிர்கால வாழ்வு வளம் பெற அனுகூலத்தன்மை உருவாகும். தொழில் வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
மீனம்
உங்களுடைய இரக்க குணத்தால் தவறான மனிதர்க்கு உதவ நேரிடலாம். குடும்பத்தில் ஏற்படுகின்ற குழப்ப நிலையை சரிசெய்வீர்கள்.செலவுகளில் சிக்கன நிலையை பின்பற்றுவீர்கள்
பூரட்டாதி 4: கவனம்
உத்திரட்டாதி : பொறுமை
ரேவதி : சிக்கனம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.