Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 ஜனவரி 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (22.01.2012)
மேடம்
வரவை விட அதிக செலவுகளை மேற்கொள்ளல், புதிய முயற்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படும், தோல்வி மனப்பான்மை.
அஸ்வினி: நஷ்டம்
பரணி: சேமிப்பு குறைதல்
கிருத்திகை 1ஆம் பாதம்: மனபயம்
இடபம்
விசித்திரமான பொருள் காணக் கிடைக்கும், பெண்களுடன் மனக் கசப்புகள் ஏற்படும், தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடுவதால் துன்பம்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: புதுமையான பொருள் காணல்
மிருகசீரிடம் 1, 2: சொல் கட்டுப்பாடு
மிதுனம்
புதிய இடமாற்றங்கள் அமையக்கூடும், சுவையான ஆகாரம் கிடைக்கும், நம்பிக்கையான பிரார்த்தனையினால் மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும்.
மிருகசீரிடம் 2, 3: அனுகூலம்
திருவாதிரை: இறை நம்பிக்கை
புனர்பூசம்: ஆரோக்கியம்
கடகம்
மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், பணவரவுகள் ஏற்படும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி.
புனர்பூசம்: லாபம்
பூசம்: ஒத்துழைப்பு
ஆயில்யம்: நன்மை
சிம்மம்
பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, பகைவர்களினால் பிரச்சினைகள் ஏற்படும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மகம்: குழப்பம்
பூரம்: சிரமம்
உத்திரம் 1ஆம் பாதம்: கவனம்
கன்னி
குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும், நண்பர்கள் தேடி வருதல், சுவையான உணவுகளை உண்ணலாம்.
உத்திரம் 2, 3, 4: நட்பு
அஸ்தம்: ஆகாரம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சந்தோஷம்
துலாம்
பெண்களின் அன்பும் அனுசரிப்பும் அதிகரிக்கும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், இசையில் நாட்டம் அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அனுகூலம்
சுவாதி: மன அமைதி
விசாகம் 1, 2, 3: ஆசீர்வாதம்
விருட்சிகம்
அதிகாரிகளுடன் பொறுமையுடன் செயல்படவும், கடின உழைப்பினால் அதிக லாபம், பெரியார்களின் உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4: வரவு
அனுசம்: நிதானம்
கேட்டை: முன்னேற்றம்
தனுசு
புதிய முயற்சிகள் தோல்வியை ஏற்படுத்தும், மனதளர்வுகள் ஏற்படும், சரும உபாதைகள் வந்து நீங்கும்.
மூலம்: நஷ்டம்
பூராடம்: தேகசுகம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பதற்றம்
மகரம்
தூர தேசங்களிலிருந்து செய்திகள் வந்து சேரும், ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும், நெருங்கிய நண்பர்களை சந்தித்தல்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: நற்செய்தி
அவிட்டம் 1, 2: ஒற்றுமை
கும்பம்
நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுதல், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
அவிட்டம் 3, 4: நிம்மதி
சதயம் : குடும்ப மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி
மீனம்
உரிய பணவரவுகள் கிடைக்கும், உடலால் சில சிரமங்கள் ஏற்படும், பகைவர்களினால் சிறு குழப்பங்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4: சுகயீனம்
உத்திரட்டாதி: பயம்
ரேவதி: அதிர்ஷ்டம்
13 minute ago
18 minute ago
23 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
23 minute ago
29 minute ago