2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (22.08.2014)

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (22.08.2014)
 
மேடம்
எதிர்பார்த்த காரியம் வெற்றியைத் தரும். வியாபார வளர்ச்சியில் புதிய பரிணாமம் ஏற்படும். தாய் வழியில் ஆதாயம் கிடைக்கும்.
அஸ்வினி : முன்னேற்றம்
பரணி : லாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
 
 
இடபம்
எதிர்கால வாழ்வு சிறக்க புதிய வாய்ப்புக்கள் வரும். உபரி வருமானம் உயரும். சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். 
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி 
ரோகிணி : வெற்றி 
மிருகசீரிடம் 1, 2: இன்பம்
 
 
மிதுனம்  
மற்றவர்களுடைய பேச்சு தொந்தரவு தருவதாக அமையும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்துவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: கவனம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: செலவு
 
 
கடகம்
மனதில் மாறுபட்ட எண்ணம் உருவாகும். எவரிடமும் தேவையற்ற வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப தேவையை நிறைவேற்ற சிறிது பணக்கடன் பெறுவீர்கள்.
புனர்பூசம்: கவலை 
பூசம் : கவனம்
ஆயில்யம்: கடன்
 
 
சிம்மம்
பொறுப்பான செயல்களின் மூலம் நண்பர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். வீட்டில் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் கூடுதல் உத்வேகம் பிறக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை
 
 
கன்னி
வரவு - செலவுகளில் சிக்கனம் அவசியம். பணியிடங்களில் சூழ்நிலைகள் சரிவர அமையாது. குடும்பத்தில் எவருடனும் வாக்கு வாதம் வேண்டாம்.
உத்திரம் 2, 3, 4: சிக்கனம்
அஸ்தம்: கவலை
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவனம்
 
 
துலாம்
தொழில் இலக்கு எளிதாக நிறைவேறும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. நல்ல ஓய்வுகள் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : இன்பம்
சுவாதி : ஓய்வு
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
 
 
விருட்சிகம்
எந்த செயல்களிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் உள்ள குறைகளை சரிசெய்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை வாங்க வேண்டாம்.
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: வெற்றி 
கேட்டை: கவனம்
 
 
தனுசு
புகழும் வெற்றியும் வந்து சேரும். பணிகளில் இருந்த இடையூறுகள் சரியாகும். வெகுநாட்களாக சந்திக்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: அமைதி  
 
 
மகரம்
ஆன்மீக சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். மற்றவர்களுடைய பேச்சு உங்களின் மனதைக் கவரும். பணவரவு தடையின்றி கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம் 
அவிட்டம் 1, 2: வரவு
 
 
கும்பம்
மனப்பூர்வமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.மற்றவர்கள் சொல்லும் குறைகளை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பணவரவை முக்கிய செலவுக்கு பயன்படுத்துவீர்கள்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: செலவு
 
 
மீனம்
உங்களுடைய செயல்களில் எளிமையும் சமயோசிதமும் பரிமளிக்கும். சமூகத்தின் பார்வையில் அந்தஸ்த்து பெறுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுப செய்தி வரும்.
பூரட்டாதி 4:  மகிழ்ச்சி 
உத்திரட்டாதி :  வசதி
ரேவதி : இன்பம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .