மேடம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவும் செலவும் சமமாக இருக்கும்.
அஸ்வினி : குழப்பம்
பரணி : துக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்
இடபம்
கடிதங்கள் சுபசெய்தியை கொண்டு வந்து சேர்க்கும். உறவினர்கள் சந்தித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் நற்பெயரைப் பெறுவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : வெற்றி
மிருகசீரிடம் 1, 2 : மகிழ்ச்சி
மிதுனம்
பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதைகொடுப்பது நன்மை தரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும்.
மிருகசீரிடம் 2, 3: செலவு
திருவாதிரை: வெறுப்பு
புனர்பூசம்: நஷ்டம்
கடகம்
பொது நலத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற மனபயம் நீங்கும். வியாபாரிகளின் கடன் யாவும் வசூலாகும்.
புனர்பூசம்: ஆர்வம்
பூசம் : இன்பம்
ஆயில்யம்: கவனம்
சிம்மம்
குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. பணியாளர்களுக்கு பணியிடத்தில் அதிக மதிப்பு கூடும்.
மகம்: இன்பம்
பூரம்: அமைதி
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
கன்னி
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிக்க மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவார்கள்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தனலாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம் : இன்பம்
துலாம்
பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாள். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறலாம். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : இன்பம்
சுவாதி : முயற்சி
விசாகம் 1, 2, 3 : பயம்
விருட்சிகம்
பெற்றோர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள்.
விசாகம் 4: உதவி
அனுசம்: இன்பம்
கேட்டை: வெற்றி
தனுசு
வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதால் விருப்பங்கள் நிறைவேறும். வரவை விட செலவு கூடினாலும் சேமிப்பில் ஒன்றும் குறையாது.
மூலம்: நலம்
பூராடம் : இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
மகரம்
செய்ய மறந்த காரியம் ஒன்றை துரிதமாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்த மாட்டீர்கள். உற்சாகத்தோடு செயல்படும் நாள்.
உத்திராடம் 2, 3, 4: செலவு
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: இன்பம்
கும்பம்
காணாமல் போன பொருள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம். நண்பர்களிடம் நயமாகப் பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : செலவு
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்
மீனம்
நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.