2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (24.08.2014)

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (24.08.2014)

மேடம்
கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய பொருட்கள் அணிகலன்கள் சேரும். நண்பர்கள் உதவி புரிவார்கள்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்


இடபம்
சுப செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். தான தர்ம பணிகளில் ஈடுபாடு கூடும். பெரியவர்கள் உதவுவார்கள்.
கிருத்திகை 2, 3, 4: இலாபம்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: கவனம்


மிதுனம்

பணிகளில் முனைப்போடு செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள்.  நெருங்கிய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அதன் மூலம் பணவரவும் புகழும் ஏற்படக்கூடும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: இன்பம்


கடகம்
இல்லத்தரசிகளின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குல தெய்வ வழிபாடுகளில் கவனம் தேவை. சுப செலவுகள் கூடுதலாக இருக்கும். சமாளித்து விடுவீர்கள்.
புனர்பூசம்: கஷ்டம்         
பூசம்: அலைச்சல்
ஆயில்யம்: துக்கம்


சிம்மம்
நற்காரியங்கள் பொதுநலப் பணிகளில் ஈடுபாடு கூடும். பணிசுமையில் இருந்து சிறிது விடுபடுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இனபம்;
உத்திரம் 1ஆம் பாதம்: இலாபம்


கன்னி
திடீர் பொருள் வரவு உண்டாகும். வியாபார விஷயங்களில் மிகவும் கவனம் தேவை.  அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டு.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: ஆக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்


துலாம்
நல்ல வாய்ப்புக்கள் கூடி வரும். நண்பர்கள் உதவுவார்கள். தொழில் வளர்ச்சிக்கான திட்டப் பணிகள் பலன் தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: இன்பம்
சுவாதி: பயம்
விசாகம் 1, 2, 3: உதவி


விருட்சிகம்
வெற்றிகள் குவியும். தன்னம்பிக்கை உற்சாகம் பெருகும். பந்தயங்கள் போன்றவற்றில் வெற்றி வாய்ப்புக்கள் தேடி வரும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: இலாபம்
 

தனுசு
தொட்டதெல்லாம் துலங்கும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.
மூலம்: இலாபம்
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி


மகரம்
பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உதவுவார்கள். சுபச் செலவுகள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: சுபம்
திருவோணம்: மகிழ்ச்சி 
அவிட்டம் 1, 2: இன்பம்


கும்பம்
குடும்ப நலம் சிறக்கும். பேச்சில் திறமையும் இனிமையும் வெளிப்படும். விருந்து, கேளிக்கை உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும்.
அவிட்டம் 3, 4: சந்திப்பு
சதயம்: வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: இலாபம்


மீனம்
உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை.
பூரட்டாதி 4: உற்சாகம்
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .