2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (27.10.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (27.10.2014)
 
மேடம்
உங்களின் கடின உழைப்பிற்கு பலன் கிட்டும். பிள்ளைகளுக்காக குடும்பத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்து போவீர்கள். வீண் செலவுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும்.
அஸ்வினி : மகிழ்ச்சி 
பரணி : தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம் 
 
 
இடபம்
செலவினங்களை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். கடன் அதிகமாகிக் கொண்டே போகிறது என்று அவ்வப்போது கவலைப்படுவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி : கவலை 
மிருகசீரிடம் 1, 2: கவனம் 
 
 
மிதுனம் 
காலில் அடிபடும் சின்ன சின்ன  சிகிச்சைகள் நடைபெறும். நெருங்கிய உறவினர்கள் நண்பர்களாக இருந்தாலும் அளவுடன் பழகுவது நல்லது. 
மிருகசீரிடம் 2, 3: துக்கம் 
திருவாதிரை: அலைச்சல்
புனர்பூசம் : கவனம் 
 
 
கடகம்
வேலைச் சுமை அதிகமாகிக்கொண்டே போகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. எளிய உடற்பயிற்சிகளும்  தேவைப்படுகின்றது.
புனர்பூசம்: கஷ்டம் 
பூசம் : அலைச்சல்
ஆயில்யம்: துக்கம் 
 
 
சிம்மம்
ஏமாந்த தொகையும் கைக்கு வரும். வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்தை வாங்க வேண்டி வரும்.
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: செலவுகள் 
 
 
கன்னி
மனக்கசப்பால் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வீர்கள். தள்ளிப்போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். ரியல் எஸ்டேட் கட்டுமான வகைகளால் லாபம் உண்டு.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம் 
அஸ்தம்: லாபம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம் 
 
 
துலாம்
முன் கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பற்று வரவு கூடும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம் 
சுவாதி : இன்பம் 
விசாகம் 1, 2, 3: கவனம் 
 
 
விருட்சிகம்
உத்தியோகத்தில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். சம்பளமும் எதிர்பார்த்தபடி வரும். வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டே போகும்.
விசாகம் 4: வரவு
அனுசம்: பிரச்சினைகள்
கேட்டை: அலைச்சல்.
 
 
தனுசு
விருந்தினர்களின் இடைவிடாத வருகையால் வீடு களை கட்டும். மகிழ்ச்சி கூடும். மனைவியின் அலட்சியம் தீரும். மனைவி வழி உறவினர்கள் மதிக்கும் படி பல வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்
 
 
மகரம்
எந்த விடயத்திலும் நாட்டம் இருக்காது. உடல் சூடு காரணமாக புண்கள் உண்டாகும். வீணான மன உழைச்சல்கள் காணப்படும்.  
உத்திராடம் 2, 3, 4: விருப்பமின்மை 
திருவோணம்: வெறுப்பு 
அவிட்டம் 1, 2: துன்பம் 
 
 
கும்பம்
திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சகோதர உறவுகள் உங்களிடம் சரணாகதி அடைவார்கள். பொறுப்புகள் கூடுதலாகும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : அலைச்சல்
பூரட்டாதி 1, 2, 3: இன்பம் 
 
 
மீனம்
பால்ய நண்பர்களின் பிரச்கனைகளை முன் நின்று முடிப்பீர்கள். அண்டை மாநிலத்தவரின் அறிமுகம் பயனுள்ளதாக இருக்கும். அரசியலில் திடீர் நுழைவு ஏற்படும்.
பூரட்டாதி 4:  நலம் 
உத்திரட்டாதி :  தோல்வி
ரேவதி : வாய்ப்புக்கள்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .