Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 ஜனவரி 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (31.01.2012)
மேடம்
திருடர்களினால் பயம் உண்டாகும். இதனால் வீணான சிரமங்கள் காணப்படும். உடலில் மயக்கம் உண்டாகும்.
அஸ்வினி: சிரமங்கள்
பரணி: மயக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்.
இடபம்
உடல் நிலையில் தொய்வு காணப்படும், மனதில் சில குழப்பமான சூழ்நிலை உருவாகும், துக்கம் நிலவும்.
கிருத்திகை 2, 3, 4: துக்கம்
ரோகிணி: குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: துன்பம்
மிதுனம்
பல புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சங்கீதத்தில் ஆர்வம் உண்டாகும், அதனால் மகிழ்ச்சி ஏற்படும். இருந்தாலும் மனதளவில் கஷ்டங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: கஷ்டம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: முயற்சி
கடகம்
வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். மனதில் பயம் காணப்படும். உடலில் சோர்வு காணப்பட்டு தலைவலி, மயக்கம் ஆகியவை காணப்படும்.
புனர்பூசம்: பயம்
பூசம்: துன்பம்
ஆயில்யம்: துக்கம்
சிம்மம்
சில வேண்டாத பேச்சுக்களால் மனம் சஞ்சலம் அடையும். இதனால் பிரச்சினைகள் வரக்கூடும், எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வேண்டாத செலவுகள் கூட உண்டாகும்.
மகம்: துன்பம்
பூரம்: செலவுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்
கன்னி
வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அதிகாரிகளின் பேட்டிகள் கிடைக்கப்பெறுவீர்கள். காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
துலாம்
பொழுதுபோக்குகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும், அப்பொழுது கவனத்துடன் இருப்பது அவசியம். தொழில் நிமிர்த்தமாக பிரயாணம் செல்லுதல், இதனால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: லாபம்
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
விருட்சிகம்
வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வேலையில் உயர் பதவியில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வயிற்றில் வலி தோன்றி மறையும்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: துக்கம்
கேட்டை: பிரச்சினை
தனுசு
எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவும். வீணான அலைச்சல்கள் காணப்படும். செய்யும் செயல்களில் சில பல தவறுகள் உண்டாகும், எனவே கவனத்துடன் பணிபுரிவது அவசியம். முயற்சிகள்; தோல்வியடையும்.
மூலம்: அலைச்சல்
பூராடம்: தவறுகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: துக்கம்
மகரம்
நல்ல நண்பர்களின் சேர்க்கைகளினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இருந்தபோதிலும் மனதளவில் அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: அலைச்சல்
கும்பம்
இல்லத்தில் உள்ள பெண்கள் மூலம் மகிழ்ச்சிகள் கிடைக்கப்பெறுவீர்கள். வேறு இடமாற்றம் மனதில் மாறுதல்களை உண்டாக்கும். விருந்து உண்ணும் வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
மீனம்
மகான்களின் தரிசனம் கிடைக்கும், இதனால் மனது மகிழ்ச்சியடையும். முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும், அதிக பண லாபம் உண்டாகும்.
பூரட்டாதி 4: இன்பம்.
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: லாபம்
15 minute ago
20 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
25 minute ago
31 minute ago