Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 பெப்ரவரி 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (10.02.2012)
மேடம்
திருடர்களினால் பயம் ஏற்பட்டு மயக்கம் மற்றும் பயங்கள் உண்டாகும். வீண் சிரமங்கள் காணப்படும்.
அஸ்வினி: பயம்
பரணி: துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துக்கம்
இடபம்
உடலில் உஷ்ணம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுதல். குடும்பத்தில் கஷ்டம் உண்டாகும், மனதில் குழப்பமான நிலை நீடிக்கும்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி: குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: கஷ்டம்
மிதுனம்
ஏதாவது ஒரு விடயத்தில் மிகுந்த ஆர்வமுடன் காணப்படுவீர்கள். இதனால் மகிழ்ச்சியான நிலை உருவாகும்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: ஆர்வம்
புனர்பூசம்: மகிழ்ச்சி
கடகம்
வெளியூர் சென்று வருவீர்கள், இதனால் உடலளவில் பாதிப்பு காணப்படும். கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
புனர்பூசம்: துன்பம்
பூசம்: துக்கம்
ஆயில்யம்: பயம்
சிம்மம்
வீண் பேச்சுக்களால் வேண்டாத பிரச்சினைகள் மற்றும் அலைச்சல் உருவாகும். தவிர்க்க முடியாத சில செலவுகள் உருவாகும்.
மகம்: துக்கம்
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: அலைச்சல்
கன்னி
உயர் அதிகாரிகளுடன் ஆரோக்கியமான போட்டி நிலை காணப்படும். காரியத்தில் வெற்றியடைவீர்கள், எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்
துலாம்
சில துக்கமான நிகழ்வுகள் உண்டாகும். மனதில் கவலை காணப்படும். மனம் தளராமல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துன்பம்
சுவாதி: முயற்சி
விசாகம் 1, 2, 3: துக்கம்
விருட்சிகம்
அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பிரச்சினையான சூழ்நிலை உருவாகும், பெரியோர்களின் சந்திப்பு, தரிசனம் ஆகியவை கிடைக்கும்.
விசாகம் 4: பிரச்சினை
அனுசம்: சந்திப்பு
கேட்டை: இன்பம்
தனுசு
மனதில் துக்கம் உண்டாகி, செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்படும். முயற்சியில் தோல்வியான நிலை இதனால்; ஏற்படும்.
மூலம்: துக்கம்
பூராடம்: தோல்வி
உத்திராடம் 1ஆம் பாதம்: துக்கம்
மகரம்
மனதளவில் அலைச்சல் ஏற்படும். நண்பர்களுடன் சுற்றுலா செல்லுதல் மற்றும் நல்ல சுவையான உணவு கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: அலைச்சல்
கும்பம்
மகிழ்ச்சியான செய்தி மற்றும் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் விருத்தியடையும், தனலாபம் உண்டாகும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
மீனம்
நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும், அதிக பணலாபம் உண்டாகும். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
பூரட்டாதி 4: வெற்றி
உத்திரட்டாதி: லாபம்
ரேவதி: மகிழ்ச்சி
14 minute ago
19 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
24 minute ago
30 minute ago