Janu / 2026 மே 13 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாக்யா சோலங்கஆராச்சி என்ற 23 வயதுடைய இந்த யுவதி, இத்தாலிய பொலிஸ் படையணியில் இத்தகைய உயர்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது இலங்கை யுவதி என்ற பெருமையைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
பின்னணி: பாக்கியாவின் தந்தை ஹென்றி சோலங்கஆராச்சி மற்றும் அவரது தாயார் புத்தளம், வென்னப்புவ புனித அன்னா வீதியைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கடந்த 1982 ஆம் ஆண்டு தொழில் நிமித்தம் இத்தாலிக்குச் சென்றிருந்தனர். தற்போது இவர்கள் மிலானோ நகரில் வசித்து வருகின்றனர்.
கல்வி மற்றும் தகைமை: சிறந்த பட்டதாரியான பாக்கியா, இத்தாலிய பல்கலைக்கழகம் ஒன்றில் வணிகவேணிப் (B.Com) பட்டத்தைப் பெற்றுள்ளார். அவர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழி உட்பட மேலும் சில மொழிகளைச் சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்டவர்.
பொலிஸ் சேவையில் இணைவதற்காக நடத்தப்பட்ட அதிதீவிர கடினமான பரீட்சைகள் மற்றும் புலனாய்வுச் சோதனைகளில் சித்தியடைந்த இவர், சாதாரண ஒருவரால் மேற்கொள்ள முடியாத மிகவும் கடினமான ‘இராணுவ’ போர் பயிற்சிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். சுமார் ஆறு அடி உயரமான கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட இவர், சிறந்த ஆளுமையுள்ள ஒரு யுவதியாவார்.
பாக்கியாவின் அபரிமிதமான அர்ப்பணிப்பு மற்றும் திறமையைக் கருத்திற்கொண்டே, அவரது பயிற்சிக் காலத்தின் முடிவிலேயே அவரை நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
வெளிநாடு ஒன்றின் இத்தகைய பலம்வாய்ந்த பாதுகாப்புப் பிரிவில், நம் நாட்டு யுவதி ஒருவர் உயர்பதவி வகிப்பது ஒட்டுமொத்த இலங்கைக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.

11 minute ago
19 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
39 minute ago
54 minute ago