Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 25 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமீப காலமாக உலகின் பெரும் நிறுவனங்கள் தனது ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது. இது பல தனியார் ஊழியர்களிடத்தும் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. மெட்டா, கூகுள், மைக்ரோசொஃப்ட் போன்ற பெரு நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.
இந்நிலையில், மைக்ரோசொஃப்ட் நிறுவனம் கடந்த வாரத்தில் மேலும் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதில் பெரும்பாலும் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை குழுக்களில் பணி செய்து வந்த ஊழியர்கள் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.
இது வரை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்த ஆதாரங்களை பார்க்கையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொஃப்ட் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இது போன்ற பணிநீக்கங்கள் பல தனியார் ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பையே ஏற்பத்தியுள்ளது.
பொதுவாக, ஜூலை 1 ஆம் திகதி தொடங்கிய புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அதன் செயல்பாடுகளில் சில மாற்றங்களைச் செய்வது வழக்கமான ஒன்றாகும். அதன்படி, கடந்த வாரம் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. டிஜிட்டல் விற்பனை குழுவில் உள்ள பல ஊழியர்கள் இந்த பணிநீக்கத்தில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago