2026 மே 09, சனிக்கிழமை

1,300 உக்ரைன் துருப்புக்கள் படையெடுப்பில் பலி

Freelancer   / 2022 மார்ச் 13 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து சுமார் 1,300 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார் என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிய்வ் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதல் முறையாக சனிக்கிழமையன்று மேற்குறிப்பிட்ட தகவலை, ஊடக சந்திப்பொன்றில் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று கிட்டத்தட்ட  500 வீரர்களை இழந்ததாக ரஷ்யா தெரிவித்திருந்த போதும் ரஷ்யா சுமார் 12,000 வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
இது ஒன்றுக்கு பத்து என்ற விகிதம் எனவும் அது தனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றும் அவர்  குறிப்பிட்டார்.
 
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு ரஷ்ய இராணுவம் சுமார் 150,000 வீரர்களை அர்ப்பணித்துள்ளது.

பேரழிவுக்குள்ளான துறைமுக நகரமான மரியுபோலுக்கு உதவி பெறுவதற்கான புதிய முயற்சிகளுக்கு மத்தியில், ஏனைய உக்ரைனிய நகரங்களிலுள்ள பொது மக்கள் பகுதிகளைத் தாக்கிவரும் ரஷ்யப் படைகள் கிய்வ் மீதான தாக்குதலை சனிக்கிழமையன்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .