2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

10 குழந்தைகள் உட்பட 19 பேர்பலி

Janu   / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாநாட்டில், 70 பயணிகளை ஏற்றிசென்ற பேருந்து அங்குள்ள ரன் கோகிரண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அங்குள்ள மான்செரா ஆற்றுப்பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்தனர். அவற்றில் 10 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சனிக்கிழமை (23) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .