Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 05 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான நெருங்கி வரும் சூழலில் அமெரிக்காவை சேர்ந்த சப்ஸ்கிரிப்ஷன் பாக்ஸ் நிறுவனம் 12 ஹால்மார்க் விடுமுறை திரைப்படங்களை பார்த்து அவற்றை தரவரிசைப்படுத்தும் நபருக்கு 2000 அமெரிக்க டாலர்( இலங்கை மதிப்பு படி 6 லட்சம்) பணத்தை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த சலுகையை பெற விரும்புவோர் பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியலையும் நிறுவனம் வழங்கியுள்ளது. தேர்வாகும் விமர்சகர்கள் திரைப்படங்களை பார்ப்பதோடு இன்ஸ்டாவில் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த அதிர்ஷ்டசாலி ஒவ்வொரு படத்தையும் ஃபெஸ்ட்டிவிட்டி(Festivity), ஃபேக்டர்(Factor), கெமிஸ்ட்ரி செக் (Chemistry Sec), எமோஷ்னல் இம்பேக்ட்(Emotional impact) மற்றும் படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என தோன்றும் ஆசை போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் மதிப்பிட்டு தங்களது எண்ணங்களை இன்ஸ்டாவில் பகிர வேண்டும்.
இதில் ஈடுபடும் பண்டிகைக் கால திரைப்பட ஆர்வலருக்கு சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் (Cinematic Experience )மட்டுமல்லாது 2000 டாலர் பரிசு தொகை மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
26 minute ago
40 minute ago