2025 மே 14, புதன்கிழமை

130 சுரங்கங்கள் அழிப்பு

Freelancer   / 2023 நவம்பர் 09 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எக்ஸ்' ஊடகத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ள பதிவில் , “காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஹமாஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ள 130 சுரங்கப்பாதை நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.

அங்கு சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் ராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும் சென்றுள்ளது. அந்தக் குழு, மற்ற வீரர்களுடன் இணைந்து காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இஸ்ரேல் ராணுவத்தின் தரைவழித் தாக்குதல் நடவடிக்கையால், பூமிக்கு அடியில் ஹமாஸ் அமைத்துள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X