S.Renuka / 2026 ஜனவரி 15 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் மகாராணியைக் காண இருக்கிறது.
தற்போதைய மன்னர் ஆறாம் பிலிப் மற்றும் ராணி லெட்டிசியாவின் மூத்த மகளான 20 வயது இளவரசி லியோனர், ஸ்பெயினின் அடுத்த வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் 1800-களில் ஆட்சி செய்த இரண்டாம் இசபெல்லாவுக்குப் பிறகு லியோனர் ஸ்பெயினின் மகாராணியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, ஸ்பெயினின் மகுடம் ‘ஹவுஸ் ஆஃப் போர்பன்' (House of Bourbon) வம்சத்தின் வசம் உள்ளது.
பிரான்சிஸ்கோ பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு, 1975இல் முதலாம் ஜுவான் கார்லோஸ் தலைமையில் முடியாட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டது.
அவர் 2014இல் தனது மகன் ஆறாம் பிலிப்புக்காக தனது பதவியைத் துறந்தார்.
மன்னர் பிலிப் 2004இல் பத்திரிகையாளரான லெட்டிசியாவைத்
திருமணம் செய்தார். இவர்களுக்கு லியோனர் உட்பட இரு மகள்கள்
உள்ளனர்.
43 minute ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
7 hours ago
16 Jan 2026