2025 ஜூலை 09, புதன்கிழமை

150 சுரங்கங்களை அழித்த இஸ்ரேல்

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடங்கி 23 நாட்களை கடந்து விட்டது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை ஓயமாட்டோம் என அறிவித்துள்ள இஸ்ரேல் கடந்த 2 நாட்களாக காசா மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

இரவு முழுவதும் சுமார் 100 போர் விமானங்கள் ஒரே சமயத்தில் காசா மீது தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.

இந் நிலையில் சனிக்கிழமை (28) நடந்த கடுமையான வான் வெளி குண்டு வீச்சு தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் 150 சுரங்க கட்டமைப்புகள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .