Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 04 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் நோர்த் கரோலினா( North Carolina ) பகுதியைச் சேர்ந்தவர் கார்லொஸ் (Carlos).
இவரது மனைவியின் பெயர் பெட்டி ஹெர்நாண்டஸ்( Patty Hernandez). இவருக்கு தற்போது 40 வயதாகும் நிலையில், இத் தம்பதியர் இதுவரை மொத்தம் 16 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
இக் குழந்தைகளில், 6 ஆண் குழந்தைகளும், 10 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதில், 3 இரட்டை குழந்தைகளும் அடங்கும்.
அது மட்டுமில்லாமல்,இந்த 16 குழந்தைகளின் பெயர்களிலும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதாவது, அவர்களின் தந்தையான Carlos பெயரில் வரும் முதல் எழுத்தான 'C' வைத்து தான் அனைத்து குழந்தைகள் பெயரும் ஆரம்பமாகிறது.
இந்நிலையில் தனது திருமண வாழ்வில் 14 ஆண்டுகள் கர்ப்பமாக இருந்துள்ள பெட்டி தற்போது மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 20 குழந்தைகள் கிடைப்பது வரை குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்தும் முடிவு இருவரும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாது தமது வீட்டில் மொத்தமாக 5 படுக்கை அறைகள் உள்ளன எனவும் அதில் பல அடுக்கு படுக்கைகள் உள்ளன எனவும், ஒரு வாரத்திற்கு தங்களின் குழந்தைகளை பராமரித்து கொள்ள இலங்கை மதிப்பில் சுமார் 3,25,000 ரூபாய் வரை அவர்கள் செலவழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
14 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
14 minute ago
20 minute ago
24 minute ago