சீனாவை சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவருக்கு வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அவரது சிறுநீரில் இரத்தமும் வந்துள்ளது.
சென் லீ என்ற புனை பெயரால் அறியப்படும் அந்த நபருக்கு வயது வந்தபோது, சீரற்ற சிறுநீர் வெளியேற்றம் இருந்துள்ளது. இதற்காக அதனை சரி செய்யும் அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.
அதன்பின்னர், 20 ஆண்டுகளாகவே அவருக்கு சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனால், அப்பெண்டிஸ் எனப்படும் குடல்வால் அறுவை சிகிச்சையையும் அவர் செய்து கொண்டார்.
இந்நிலையில், சென்னுக்கு பெண்களுக்கான பாலியல் குரோமோசோம்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் மருத்துவ பரிசோதனை செய்ததில், கர்ப்பப்பை மற்றும் பெண்களுக்கான சுரப்பிகள் உள்ளிட்ட பெண்களுக்கான இனப்பெருக்க உள் உறுப்புகள் அவருக்கு இருப்பது தெரிய வந்தது.
சென்னுக்கு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருந்து வந்துள்ளன. 20 ஆண்டுகளாக அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டு உள்ளது.
இதனாலேயே அவருக்கு சிறுநீரில் இரத்தம் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சென்னுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதன்பின்னர், சென் மற்ற ஆண்களை போல் வாழலாம் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் லுவோ ஜிபிங் கூறியுள்ளார்.
எனினும், விந்தணு உற்பத்தி செய்ய முடியாத சூழலில் அவரால் இனப்பெருக்கம் செய்ய முடியாது என்றும் லுவோ கூறியுள்ளார்.
உலக மக்கள் தொகையில் 0.05 முதல் 1.7 சதவீதத்தினர் இதுபோன்று ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளுடன் உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.