2026 மே 09, சனிக்கிழமை

3 முறை கொலை முயற்சி; உயிர் தப்பிய செலன்ஸ்கி

Ilango Bharathy   / 2022 மார்ச் 08 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து  நீடித்துவரும் நிலையில் அங்கு  அதிக அளவில் உயிர்இழப்புக்களும்,பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர்  செலன்ஸ்கியைக் (Volodymyr Zelenskyy) கொல்ல 3 முறை முயற்சி நடைபெற்றதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ‘செலன்ஸ்கியைக் கொல்ல வாக்னர் குழு மற்றும் செச்சென் கிளர்ச்சியாளர்கள் என இரண்டு வெவ்வேறு குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும்  உக்ரேனுடன் போரை விரும்பாத ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பில் உள்ள சிலர் இக்கொலை முயற்சி பற்றிய தகவலை உக்ரேனிடம் முன் கூட்டியே கூறியதாகவும்  கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து உக்ரேனின் தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ கவுன்சில் செயலாளர் ஒலக்சி டனிலோவ் கூறுகையில், “உக்ரேன் ஜனாதிபதியைக் கொலை செய்ய வந்தவர்கள் தலைநகர் கீவ் அருகே உள்ள புறநகர் பகுதியில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .