Freelancer / 2024 செப்டெம்பர் 05 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநில பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 14 வயது மாணவன் என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜோர்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பாடசாலையொன்றில், நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.
காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், 4 பேரின் உயிரை பறித்தவர், 14 வயது மாணவர் என்றும், கொல்லப்பட்ட நான்கு பேரில் இருவர் சக மாணவர்கள், இருவர் ஆசிரியர்கள் என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இப்போது நடந்துள்ள சம்பவத்தில் சிறுவனே கொலைகாரனாக மாறி இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக, அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.S
11 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
39 minute ago
2 hours ago