2025 மே 19, திங்கட்கிழமை

40 தடவைகள் அறுவை சிகிச்சை செய்த அழகி

Ilango Bharathy   / 2022 ஜூலை 15 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அளவில் பிரபலமான மொடல் அழகியான  கிம் கர்தாஷியனை இன்ஸ்டாகிராமில்
சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மொடலான ஜெனிபர் என்பவர், கிம் கர்தாஷியனை போல, மொத்தமாக மாற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இதற்காக, தனது 17 வயதில் முதல் அறுவை சிகிச்சை செய்து வந்த ஜெனிபர், அடுத்த 12 வருடங்களில், சுமார் 40 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்காக, மொத்தம் ஆறு லட்சம் டொலர்கள் (இலங்கை  மதிப்பில் சுமார் 18 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளார்.
இந்நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி மாறிக் கொண்டிருப்பது தனக்கு சரிவராது என்று  முடிவு செய்த ஜெனிபர், மீண்டும் தன்னுடைய பழைய உருவத்திற்கே வர வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பேசும் ஜெனிஃபர், "பலரும் என்னை கிம் கர்தாஷியன் என்றே அழைத்து வந்தது, எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சல் ஊட்டத் தொடங்கியது. நான் மொடலாக இருந்து, தற்போது வணிகம் செய்து வருகிறேன். இப்படி என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நிறைய விஷயங்களை சாதித்து விட்டேன். ஆனாலும், நான் கர்தாஷியனை போல இருப்பதால் தான், பலரும் எனக்கான அங்கீகாரத்தை தருகிறார்கள். நான் உண்மையில் யார் என்பதே காணாமல் போய்விட்டது. அறுவை சிகிச்சை செய்து செய்து, அதற்கு நான் அடிமையாகி விட்டேன் என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன். இதனால் மீண்டும் என்னுடைய பழைய உடலையும் தோற்றத்தையும் பெற வேண்டும் என நான் நினைத்தேன்" என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X