2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

40 விவசாயிகள் சுட்டுக்கொலை

Freelancer   / 2025 ஜனவரி 14 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவில், திங்கட்கிழமை (13) இரவு, ஆயுதமேந்திய கும்பல்களால் 40 விவசாயிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில், ஆயுதமேந்திய கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன. பழமைவாதிகளான இவர்கள், மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

இவர்கள், விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயற்பட்டு வரும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,  போர்னோ மாகாணத்தின் மோகுன்னே கிராமத்துக்குள், திங்கட்கிழமை (13) இரவு, ஆயுதமேந்திய கும்பல் ஒன்று புகுந்து, அங்குள்ள விவசாயி்களை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், 40 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X