Freelancer / 2026 ஜனவரி 12 , பி.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை காரணமாக சுமார் 544,000 கணக்குகள் மெட்டா நிறுவனத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்திற்கு இணங்கிய முதல் வாரத்தில், இன்ஸ்டாகிராமில் 330,639 கணக்குகளும், முகப்புத்தகத்தில் 173,497 கணக்குகளும், த்ரெட்ஸில் 39,916 கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் இந்தத் தடை, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் வழிமுறைகளிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. R
35 minute ago
3 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
14 Jan 2026